ஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு

தினமலர்  தினமலர்
ஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு

பிரிட்டோரியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தென்னாப்பிரிக்கா பிரிவு ஆலை மூடப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் ஆர்சலர் மிட்டல். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்டு ஆஃப் டைரக்டர்களின் தலைவராகவும் லட்சுமி மிட்டல் உள்ளார்.

60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவது ஸ்டீல் நிறுவனம் உள்ளது. ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவின் வடக்கு கேப்டவுண் நகரில் சல்தான்ஹா என்ற இடத்தில் ஆர்சலர் மிட்டலின் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.

சமீபகாலமாக இத்தொழிற்சாலை கடும் நிதி நெருக்கடியால் சிக்கியுள்ளதையடுத்து உற்பத்தியை நிறுத்தி வைத்து தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளதாக ஆலை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. நிர்வாகத்தின் முடிவால் அங்கு பணியாற்றும் 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டதுள்ளது. தென்னாப்பிரிக்கா அரசும் கவலையடைந்துள்ளது.

மூலக்கதை