பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1

தினகரன்  தினகரன்
பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1

வாங்கரெய்: நியூசிலாந்து லெவன் அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து லெவன் அணி 1 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்தது.நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இங்கிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாங்கரெயில் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் பயிற்சி போட்டியில் (2 நாள் ஆட்டம்), டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து லெவன் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டொமினிக் சிப்லி 100 ரன், ஜாக் கிராவ்லி 103 ரன் விளாசி ஓய்வு பெற்றனர். கேப்டன் ஜோ ரூட் 41 ரன், ஓல்லி போப் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.2வது பயிற்சி ஆட்டம் (3 நாள்) இதே மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

மூலக்கதை