பொலிவியா முன்னாள் அதிபர் மொரேல்சுக்கு தஞ்சம் மெக்சிகோ ஒப்புதல்

தினகரன்  தினகரன்
பொலிவியா முன்னாள் அதிபர் மொரேல்சுக்கு தஞ்சம் மெக்சிகோ ஒப்புதல்

லா பாஸ்: பொலிவியா நாட்டு முன்னாள் அதிபர் இவோ மொரேல்சுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதற்கு மெக்சிகோ முன்வந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், அதிபர் இவோ மொரேல்ஸ் முறைகேடு செய்து 4வது முறையாக, அதிபராக ஆனதாக எதிர்க்கட்சியினரும், மக்களும் பெரும் போராட்டத்தில் இறங்கி னர். போராட்டங்கள் வலுத்ததால், இவோ மொரேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே. மொரேல்ஸ், மெக்சிகோ வெளியுறவுத் துறை அமைச்சர் மெர்சிலோ எப்ராடை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் என கோரிக்ைக விடுத்தார். இதற்கு மெக்சிகோ அனுமதி அளித்துள்ளது. இது குறித்து மெக்சிகோ வெளியுறவு துறை அமைச்சர் எப்ராட் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘முன்னாள் அதிபரை ஏற்றி வருவதற்காக மெக்சிகோ ராணுவ விமானம் ஏற்கனவே புறப்பட்டு விட்டது. சர்வதேச விதிகளின்படி அவர் மெக்சிகோவின் பாதுகாப்பில் இருக்கிறார். அவரது வாழ்க்கை மற்றும் நேர்மை காப்பாற்றப்பட்டு உள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை