பிளாஸ்டிக்குக்கு அரிசி: கலக்கும் கலெக்டர்!

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக்குக்கு அரிசி: கலக்கும் கலெக்டர்!

'ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஒப்படைத்தால், 1 கிலோ அரிசி வழங்கப்படும்' என்ற, தெலுங்கானா மாநில கலெக்டரின் முயற்சிக்கு, மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆரம்பித்த சில நாட்களிலேயே, 31 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் ஒப்படைத்து உள்ளனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள முலுகு மாவட்ட கலெக்டர் சி.நாராயண ரெட்டி, சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். 'பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மறுசுழற்சி'பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

1 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்தால், 1 கிலோ அரிசி வழங்கப்படும்' என, அவர் அறிவித்தார்.இதற்காக, மாவட்டத்தில் உள்ள, 175 கிராமங்களில், 250 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதல் நாளிலேயே, 2,400 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் ஒப்படைத்துள்ளனர். இதுவரை, 31 ஆயிரம் கிலோ ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவை, முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது.இந்த திட்டத்துக்கு மிகப் பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த, அவர் பொதுமக்களிடம் இருந்து நன்கொடைகள் கோரினார். அரிசியாக அல்லது பணமாக செலுத்தலாம் என அறிவித்து, அதற்கான சிறப்பு வசதியையும் செய்துள்ளார்.

இதுவரை, 45 ஆயிரம் கிலோ அரிசியும், 6 லட்சம் ரூபாயும் அன்பளிப்பாக கிடைத்து உள்ளன. இலவசம்பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பான பிரசாரத்தையும், மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதைத் தவிர, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, துணிப் பைகளை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது. துணிப் பைகள் தைப்பதற்காக, மாவட்டத்தைச் சேர்ந்த டெய்லர்கள் உதவி பெறப்பட்டுள்ளது.

மக்கள் கொடுத்துள்ள நன்கொடையில் இருந்து, துணிப் பைகள் தைக்கப்பட்டு, மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.இது குறித்து, கலெக்டர், நாராயண ரெட்டி கூறியதாவது: மாவட்டத்தில், பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளன. அதனால், இங்கு அதிக அளவில் பிளாஸ்டிக் குப்பை சேருகின்றன. இரண்டு டன் வரை குப்பை சேருகின்றன. அதை தடுக்கவே, இந்த விழிப்புணர்வு நடவடிக்கை.இந்த முதல் கட்ட பிரசாரத்தைத் தொடர்ந்து, பிளாஸ்டிக் குப்பை போடுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை