ஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹாலிவுட் இயக்குனர் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார்: மாஜி நடிகை பரபரப்பு புகார்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி தன்னை 18 வயதில் ஓட்டல் அறையில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்தார் என மாஜி நடிகை புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நைஃப் இன் தி வாட்டர், தி டெனன்ட்,  டெத் அன்ட் தி மெய்டன், தி கோஸ்ட் ரைட்டர் போன்ற பல்வேறு ஆங்கில படங்களை இயக்கிய ஹாலிவுட் டைரக்டர் ரோமன் போலன்ஸ்கி(86).

இவரது பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 1978ம் ஆண்டு 13 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் அவரை போலீசார் தேடினார். அப்போது வெளிநாடு தப்பிச் சென்றார்.

பின்னர் லண்டனில் வசித்து வந்தார். இந்நிலையில் தற்போது மாஜி நடிகை ஒருவர் ரோமன் மீது பாலியல் புகார் கூறியிருக்கிறார்.

அவர் பெயர் வாலென்டெய்ன் மொன்னியர்.

எனக்கு 18 வயதாக இருந்தபோது ஓட்டல் அறை ஒன்றில் வைத்து ரோமன் என்னை கொடூரமாக பலாத்காரம் செய்தார். மாத்திரைகள் சாப்பிட வற்புறுத்தினார்.

சம்பவத் துக்கு பிறகு என்னிடம் கண்ணீர் விட்டு கதறிய ரோமன், இதுபற்றி வெளியில் கூற வேண்டாம் என்று கேட்டு சத்தியம் வாங்கினார். அதனால் இத்தனை வருடம் அதுபற்றி கூறாமல் இருந்தேன்.

ஆனால் தற்போது அந்த சம்பவம்பற்றி பகிரங்கப்படுத்தி விட்டேன். நான் சாவை நெருங்கிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன்’ என்றார் வலென்டெயன் மென்னியர்.

இவருக்கு  தற்போது 60 வயது ஆகிறது. நடிகையின் இந்த புகாரை டைரக்டர் ரோமன் மறுத்திருக்கிறார்.

இதுபற்றி சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

.

மூலக்கதை