இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார்

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

இங்கு 2 நாட்கள் தங்க உள்ளார். இந்தியா வரும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதனைதொடர்ந்து முதல் மற்றும் 2ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.

மேலும், இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றம், தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த பயணத்தில் மிக முக்கியமாக வரும் நவம்பர் 14ம் தேதி தனது 71வது பிறந்த நாளை இந்தியாவிலேயே கொண்டாட உள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் இருநாட்டு சந்தை, பொருளாதாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை