6 இந்திய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி

தினமலர்  தினமலர்
6 இந்திய தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி

துபாய் : மேற்காசிய நாடான ஓமனில், குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, ஆறு இந்திய தொழிலாளர்கள், மண்ணில் புதைந்து பலியாகினர்.

ஒமனில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த, 10ம் தேதி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள சீப் பகுதியில், குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதில், இந்திய கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டுஇருந்தனர். குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள், ஆறு இந்திய தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது, மண் இடிந்து விழுந்ததில், ஆறு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர்.

பல மணி நேர போராட்டத்துக்கு பின், ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதை, ஓமனில் உள்ள இந்திய துாதரகம் உறுதி செய்துள்ளதுஇது பற்றி, இந்திய துாதரகம், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இறந்த ஆறு பேரின் குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.'அவர்களுக்கு தேவையான உதவி செய்யப்படும். நடந்த சம்பவம் பற்றிய விபரங்களை, ஓமன் அரசிடம் கேட்டுள்ளோம்' என, கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை