தீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்!

தினகரன்  தினகரன்
தீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்!

வங்கதேச அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில் ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த இந்திய வேகம் தீபக் சாஹர், சையது முஷ்டாக் அலி தொடரில் நேற்று மீண்டும் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி அசத்தினார். திருவனந்தபுரத்தில் விதர்பா அணிக்கு எதிராக நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக களமிறங்கிய அவர் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். எனினும், இந்த போட்டியில் விதர்பா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. விதர்பா 13 ஓவரில் 99/9 (சாஹர் 3-0-18-4); ராஜஸ்தான் 13 ஓவரில் 105/8 (இலக்கு: 13 ஓவரில் 107).

மூலக்கதை