வங்கதேச ரயில் விபத்து

தினமலர்  தினமலர்
வங்கதேச ரயில் விபத்து

தாகா : வங்கதேசத்தில், இரண்டு பயணியர் ரயில், நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 16 பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அண்டை நாடான வங்கதேசத்தில், தலைநகர் தாகா நோக்கி சென்று கொண்டிருந்த துர்னா நிஷிதா எக்ஸ்பிரஸ் ரயில், பிரம்மன்பாரியா மாவட்டத்தில் உள்ள, மன்டோபாக் ரயில் நிலையம் அருகே, நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.அப்போது, சிட்டகாங் என்ற இடம் நோக்கி சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயில், எதிரே வந்து கொண்டிருந்தது. தண்டவாளம் மாறும்போது, 'இன்ஜின்' ஓட்டுனர்கள் 'சிக்னலை' மதிக்காமல் சென்றதால், இரு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், 16 பேர் பலியாகினர்; 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதிகாலை வேளையில் விபத்து ஏற்பட்டதால், பயணியர் அசந்து துாங்கிக் கொண்டிருந்தனர். இதனால், ரயிலின் இடிபாடுகளில், இன்னும் பலர் சிக்கி இருக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இரு ரயில்களின் ஓட்டுனர்களும் உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்த, நான்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.பிரதமர் ஷேக் ஹசீனா, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, இரங்கல் தெரிவித்தார்.

மூலக்கதை