நடிகரை ரசித்ததால் மனைவி கொலை

தினமலர்  தினமலர்
நடிகரை ரசித்ததால் மனைவி கொலை

நியூயார்க்: அமெரிக்காவில், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை ரசித்த மனைவியை பொறாமையால் கொலை செய்த கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர் தினேஷ்வர் புதிதட். இவரது மனைவி டோன் டோஜோய் (27). இருவருக்கும் கடந்த ஜூலை மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. தினேஷ்வர், பார் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். டோன் டோஜோய், பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.
இதனால், கணவருக்கு, மனைவி மீது பொறாமை ஏற்பட்டது. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பல முறை மனைவியை, புதிதட் தாக்கியுள்ளார். இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் டோன். இதனையடுத்து மனைவியை தாக்கக்கூடாது என புதிதட்டுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து டோன் டோஜோய் நண்பர் கூறியதாவது: வீட்டில், டோன் டோஜோய் ஹிருத்திக் ரோஷன் நடித்த பாடல், படங்களை பார்க்கும் போது, பொறாமை காரணமாக, டிவியை அணைக்க புதிதட் கூறுவார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. என்றார்.

போலீசார் கூறுகையில், வீட்டில் இருந்து வெளியேற டோஜோய் முடிவு செய்தார். பின் அவர், படம் பார்க்க கணவர் ஒப்பு கொண்டார் ஆனால், திடீரென, டோன் டோஜோயை கொலை செய்துவிட்டதாக, சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய புதிதட், பின்னர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை