நாட்டை விட்டு வெளியேறுகிறார் பொலிவியா மாஜி அதிபர் மோரல்ஸ்

தினமலர்  தினமலர்
நாட்டை விட்டு வெளியேறுகிறார் பொலிவியா மாஜி அதிபர் மோரல்ஸ்

மெக்சிகோ சிட்டி: தென் அமெரிக்கா நாடான பொலிவியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கையில், அதிபர் இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
தொடர் போராட்டங்கள் காரணமாக அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் மோரல்ஸ். ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இவோ மோரல்சும் கைது செய்யப்படலாம் என செய்திகள் பரவிய நிலையில் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து.மெக்சிகோவில் அரசியல் தஞ்சம் அடைய கோரிக்கை விடுத்தார் மோரல்ஸ் அதற்கு மெக்சிகோ அரசு சம்மதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை