கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை! :மாணவர் பாதுகாப்பில் அலட்சியம்!

தினமலர்  தினமலர்
கும்பகோணம் தீ விபத்துக்கு பிறகும் பாடம் படிக்கலை! :மாணவர் பாதுகாப்பில் அலட்சியம்!

கோவை:மாடி படிக்கட்டில் காஸ் சிலிண்டர் வைத்து, சத்துணவு தயாராகும் அதே நேரத்தில், அதன் அருகிலேயே கரும்பலகை வைத்து, பாடம் கற்பிக்கப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட, தப்பிக்க வழியில்லாத நிலையில், பிஞ்சு குழந்தைகளின் பள்ளி நாட்கள் தினமும், 'திக்...திக்...' என கடக்கிறது.
இது நடப்பது ஏதோ குக்கிராமத்தில் உள்ள பள்ளியில் அல்ல. நகரின் நடுவே உள்ள, கரும்புக்கடை சாரமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்தான் இந்த அவலம்.உக்கடத்தில் இருந்து, சாரமேடு வழியாக, கரும்புக்கடைக்கு அதிக வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய ரோட்டில் பள்ளி உள்ளது.
ஆனால், குழந்தைகளை பாதுகாக்க சுற்றுச்சுவர் இல்லை.138 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம் என இரு வழிகளில் வகுப்பு எடுக்க, நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். நான்கு வகுப்பறைகளே உள்ளதால், படிக்கட்டில் கரும்பலகை வைத்து பாடம் நடத்தப்படுகிறது.மாணவர்கள் ஓடி விளையாட மைதானமோ, அமர்ந்து படிக்க நுாலகமோ இல்லை. நான்கு கழிவறைகளே உள்ளன. இப்படி இல்லாத அடிப்படை வசதிகளை, பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கும் இப்பள்ளிக்கு, பிரத்யேக சமையலறை கூட இல்லாதது, கல்வியாளர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபத்தான சமையல்!இதனால் மாடி படியில் காஸ் சிலிண்டர் வைத்து, பாதுகாப்பற்ற முறையில், உணவு தயாரிக்கப்படுகிறது.
இது, மாநகராட்சி கல்வித்துறைக்கும் தெரியாமல் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.அசம்பாவிதம் ஏற்பட்டால், தப்பித்து செல்ல, அவசர வழி கூட இல்லாத இப்பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தாமல், மவுனம் காக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
தரம் உயர்த்த வேண்டும்

பெற்றோர் சிலர் கூறியதாவது:கரும்புக்கடை பகுதியில், கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆனால், ஒரு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியே உள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாதவர்கள், ஆறாம் வகுப்புக்கு மேல், 10 கி.மீ.,அப்பால் உள்ள ஒப்பணக்கார வீதி, ராஜவீதியில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கே, குழந்தைகளை அனுப்ப வேண்டும்.கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், நகருக்குள் சென்று வருவது சிரமம் என்பதாலேயே, பல மாணவ மாணவியர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இப்பள்ளியை தரம் உயர்த்தினால், இடைநிற்றல் குறையும். பள்ளிக்கான வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பள்ளி தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தியிடம் கேட்டபோது, ''பள்ளிக்கான வசதிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தும் மாநகராட்சி நிர்வாகம், அசம்பாவிதத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்குமா?கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், நகருக்குள் சென்று வருவது சிரமம் என்பதாலேயே, பல மாணவ மாணவியர் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர். இப்பள்ளியை தரம் உயர்த்தினால், இடைநிற்றல் குறையும்.
பள்ளிக்கான வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்.-பெற்றோர்மாடி படியில் காஸ் சிலிண்டர் வைத்து, பாதுகாப்பற்ற முறையில், உணவு தயாரிக்கப்படுகிறது. இது, மாநகராட்சி கல்வித்துறைக்கும் தெரியாமல் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.அசம்பாவிதம் ஏற்பட்டால், தப்பித்து செல்ல, அவசர வழி கூட இல்லாத இப்பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தாமல், மவுனம் காக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.

மூலக்கதை