நடுவானில் ''பர்த்டே'' கொண்டாட்டம்: சர்ச்சையில் தேஜாஸ்வி

தினமலர்  தினமலர்
நடுவானில் பர்த்டே கொண்டாட்டம்: சர்ச்சையில் தேஜாஸ்வி

பீஹார் : பீஹாரில் செல்வாக்கு மிக்க கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உள்ளது. இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் லாலுவின் மகன்களில் ஒருவரான தேஜாஸ்வி யாதவ், கடந்த 9-ம் தேதி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி விமானத்தில் பயணித்து நடுவானில் தனது நண்பர்கள், மற்றும் கட்சியினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடுவது போன்றும், நண்பர்களுக்கு தானே கேக் ஊட்டி விடுவது மற்றும் விமானத்திற்குள்ளேயே விருந்து பரிமாறியதுமான புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது..

கட்சியினர் கூறுகையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ராஞ்சியிலிருந்து பாட்னா செல்லும் தனி விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் தேஜாஸ்வி என்றனர் . தேஜாஸ்வியின் செயலை பா.ஜ. விமர்சித்துள்ளது.

தேர்தல் நேரத்தில் தன்னை ஏழைகளின் தலைவன் என்றெல்லாம் கூறி ஒட்டு வாங்கி விட்டு இப்படி ஆடம்பர செலவு செய்கிறார் தேஜாஸ்வி, தந்தை லாலு சிறையில் வாடி வரும் நிலையில் மகன் தேஜாஸ்வியின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

மூலக்கதை