மக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை

தினமலர்  தினமலர்
மக்களிடம் காங். நம்பிக்கை பெற தேவகவுடா கூறும் யோசனை

புதுடில்லி: மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணியில் 50:50 என சிவசேனா கோரிய விவகாரத்தால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படவே. நேற்று அக்கூட்டணி முறிந்தது.


இந்நிலையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேசியவாத காங். தலைவர் சரத் பவாரை சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார்.டில்லியில் காங்.மூத்த தலைவர்கள் மஹாராஷ்டிரா மாநில காங். தலைவர்களுடன் சோனியா நேற்று காலையில் ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் தொலைபேசியில் பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.இதையடுத்து காங்., தேசியவாத காங், சிவசேனா கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கர்நாடகாவில் செல்வாக்குமிக்க கட்சியான மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவேகவுடா அளித்த பேட்டி, மஹாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உடன் கூட்டணி வைத்ததால் அம்மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ந்தது. தற்போது சிவசேனாவை ஒதுக்கிவிட்டு ஆட்சியமைக்க விரும்பும் பா.ஜ.வுக்கு உத்தவ் தாக்கரே பாடம் புகட்ட நினைக்கிறார்.
அப்படி உத்தவ் நினைத்தால், முதற்கட்டமாக காங்., தேசியவாத காங். ஆகிய கட்சிகளுடன். சிவசேனா கூட்டணி வைக்க வேண்டும். இதில் காங். ஆதரவு அளித்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவை தொந்தரவு செய்யாமல் ஆட்சியை முழுமையாக நடத்த காங்கிரஸ் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான் காங். கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


மூலக்கதை