அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா?

தினமலர்  தினமலர்
அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா?

''அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதா, இல்லையா என்பது குறித்து, வரும், 17ல், முஸ்லிம் சட்ட வாரியத்துடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்; முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, வேறு ஒரு இடத்தை, அந்த மாநில அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

\

இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என, உ.பி., மாநில, 'சன்னி வக்ப்' வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்துக்காக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி, நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களுடன், வரும், 14ல் ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


மூலக்கதை