டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்

தினகரன்  தினகரன்
டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் பெடரரை வீழ்த்தினார் தீம்

லண்டன்: டபுள்யு.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஜான் போர்க் பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை வீழ்த்தினார். லண்டன் ஓ2 அரங்கில் நடைபெறும் இந்த தொடரில், ஆண்டு இறுதி உலக தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடித்த வீரர்கள் மற்றும் ஜோடிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் களமிறங்கி உள்ளனர். ஒற்றையர் பிரில் ஜான் போர்க், ஆந்த்ரே அகாசி என இரு பிரிவுகளில் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. ஜான் போர்க் பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஜர் பெடரர் (3வது ரேங்க்), தனது முதல் லீக் ஆட்டத்தில் டொமினிக் தீமுடன் (5வது ரேங்க்) மோதினார்.மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் டொமினிக் தீம் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் போராடி வென்றார். இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் (2வது ரேங்க்) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரட்டினியை (8வது ரேங்க்) மிக எளிதாக வீழ்த்தினார். ஆந்த்ரே அகாசி பிரிவில் நம்பர் 1 வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை