கும்மிடிப்பூண்டி அருகே சூரப்பூண்டி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பு: விவசாயிகள், மக்கள் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்மிடிப்பூண்டி அருகே சூரப்பூண்டி பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பு: விவசாயிகள், மக்கள் வேதனை

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சூரப்பூண்டி  கிராமத்தில் உள்ள சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட சூரபூண்டி பெரிய ஏரியில் இருந்து 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரை நம்பி நெல் உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

தற்போது பெய்தமழையின் காரணமாக சூரபூண்டி பெரிய ஏரி நிரம்பி கடந்த சில நாட்களாக உபரிநீர்  வெளியேறுகிறது. கால்வாய் வழியாக வெளியேறும் உபரி நீரை குடிப்பதற்கு மக்கள் பயன்படுத்துவார்கள்.

மேலும் கால்நடைகளுக்கும் பயன்பெறுகிறது.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக கால்வாய் வழியாக வெளியேறும் தண்ணீர் கருப்புநிறமாக மாறியதுடன் கடும் துர்நாற்றம் வீசியது.

இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு தோல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பெரிய ஏரிக்கு சென்று பார்த்தபோது ஏரியில் கழிவுநீர் கலந்து தண்ணீர் கருப்பு நிறமாக மாறியிருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ‘’திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்யவேண்டும்.

ஏரியின் நீரை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்’’ என்று விவசாயிகளும் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

மூலக்கதை