இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி போல வரணுமாம்: வார்னரின் செல்ல மகள் ஆசை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி போல வரணுமாம்: வார்னரின் செல்ல மகள் ஆசை

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டேவிட் வார்னர் நேற்று தனது வீட்டில் தனது 3 வயது மகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில், டேவிட் வார்னரின் மகள் இன்டி மே, ‘நான் விராட் கோஹ்லி’ என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும் போல் காட்சி பதிவாகியுள்ளது.

அதேபோல தனது தந்தை டேவிட் வார்னரை போல் விளையாடியும் காட்டுகிறார்.

இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. இன்டி விராட் கோஹ்லி போல் ஆக வேண்டுமாம்’ என எழுதியுள்ளார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது. இந்த வீடியோவுடன்,  வார்னர் தங்களது இந்திய பயணத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

.

மூலக்கதை