உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவில் 15, 16ம் தேதி விருப்ப மனு வினியோகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளாட்சி தேர்தல்: அதிமுகவில் 15, 16ம் தேதி விருப்ப மனு வினியோகம்

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15, 16ம் தேதிகளில் விருப்ப மனுக்கள் வினியோகிக்கப்படுகிறது என்று ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வருகிற 15, 16ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை உரிய கட்டண தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடமிருந்து, விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக நிர்வாகிகள் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி தென்சென்னை வடக்கு மாவட்டம்-அமைப்புச் செயலாளர்கள் பொன்னையன், கோகுல இந்திரா, அண்ணா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் கே. பாண்டுரங்கன், தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் தி. நகர் பி. சத்தியா எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளனர். தென் சென்னை தெற்கு மாவட்டம்- அமைப்பு செயலாளர்கள் டாக்டர் வா. மைத்ரேயன்,  ஆதிராஜாராம்,  புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் டாக்டர் ெஜ. ஜெயவர்தன்,  அண்ணா தொழிற்சங்கப் பேரவை பொருளாளர் எம். அப்துல் அமீது, தென் சென்னை  தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி. என். ரவி எம்எல்ஏ.

வட சென்னை வடக்கு  (கிழக்கு) மாவட்டம் அதிமுக அவைத்தலைவர்  இ. மதுசூதனன், அண்ணா தொழிற்சங்கப் பேரவை கா. சங்கரதாஸ், வட சென்னை வடக்கு  (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷிடம் இருந்தும் பெற்று கொள்ளலாம்.

வட சென்னை தெற்கு மாவட்டம்- அமைச்சர் டி. ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் ஜே. சி. டி. பிரபாகர், வட சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் நா. பாலகங்கா. வட சென்னை வடக்கு  (மேற்கு) மாவட்டம்- மாணவர் அணிச் செயலாளர்  எஸ். ஆர். விஜயகுமார்,   வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர்   டி. ஜ. வெங்கடேஷ் பாபு.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம்- அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் பா. வளர்மதி, மீனவர் பிரிவுச் செயலாளர் நீலாங்கரை எம். சி. முனுசாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்,     காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்  ச. ராசேந்திரன். காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம்- அமைப்புச் செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு,  அமைப்புச் செயலாளர்  ஏ. சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர்    வாலாஜாபாத் பா. கணேசன்.

காஞ்சிபுரம் மத்தியம்    மாவட்டம்- அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்-  ஆர். கமலக்கண்ணன், கலைப் பிரிவுச் செயலாளர் திரைப்பட இயக்குனர்  ஆர். வி. உதயகுமார், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம்  எஸ். ஆறுமுகம்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்- மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி. வேணுகோபால்,  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி. வி. ரமணா,  புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் செவ்வை மு. சம்பத்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பி. பலராமன் எம்எல்ஏ.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்-அமைச்சர்கள் பா. பென்ஜமின், மாஃபா. பாண்டியராஜன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாதவரம் வி. மூர்த்தி,  சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் எஸ். அப்துல் ரகீம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி. அலெக்சாண்டர் எம்எல்ஏ ஆகியோர் விருப்ப மனுக்களை வாங்குவார்கள்.

இதே போல அதிமுகவில் கட்சி ரீதியாக உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விருப்ப மனுக்களை வாங்குவோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை