இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு

இந்தியாவின் தேர்தல் ஆணையராக இருந்தபோது , தேர்தல் ஆணையம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு துறையல்ல என்பதையும், அதற்கு உள்ள முழு உரிமை, சுதந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி சிறந்த பணி செய்து, மக்கள் விரும்பும் அதிகாரியாக ஓய்வுபெற்ற திரு. டி.என்.சேஷன் அவர்கள் இன்று மறைந்தார்.  அவருக்கு வயது 87. ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவு பணியான கேபினட் செகரட்டரிபதவியை வகித்த போதே அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியவர்.

தேர்தல் களத்தில் எத்தனை விதிமுறைகள்.. எத்தனை கட்டுப்பாடுகள் உண்டோ அத்தனையையும் நடைமுறைப்படுத்தியவர். பொதுமக்கள் மகிழ்ச்சியில் திளைக்க, எதிர்ப்பக்கம் அரசியல்வாதிகள் கதிகலங்கி போனார்கள்.  தாம் வகித்த பதவிக்கு அழகும் பெருமையும் கம்பீரத்தையும் சேர்த்துக் கொடுத்த இந்திய ஆட்சி பணியாளர்களில் டிஎன் ஸ்டேஷனுக்கு முக்கிய இடம் உண்டு.

 

பின்புலம்:

கேரள மாநிலம் பாலக்காடு அருகே டி.எஸ். நாராயணய்யர், சீதாலட்சுமி தம்பதிக்கு டிசம்பர் 15,1932-ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்1955-ம் வருடம் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஹார்டுவர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

வகித்த பொறுப்புகள்:

கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர் மதுரை மாவட்ட ஆட்சியர் போக்குவரத்து துறை இயக்குநர் வேளாண், தொழில்துறைச் செயலர் பாதுகாப்புச் செயலாளர் அமைச்சரவை செயலாளர் திட்டக் கமிஷன் இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்.

சாதனைகள்:

வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியவர்.   வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடு கொண்டுவந்தவர்.  விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்த வைத்தவர்.   இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி

விருது:

1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது.

 

கடந்த ஆண்டு மனைவியை இழந்து சென்னை வீட்டில் வசித்து வந்த டிஎன் ஸ்டேஷனுக்கு வாரிசுகள் இல்லை.

அன்னாருக்கு என் இதயப் பூர்வமான கண்ணீர் அஞ்சலி.

 

மூலக்கதை