அடுக்குமாடி குடியிருப்பில் தீ 5 குடிசைகள் எரிந்து நாசம்

தினகரன்  தினகரன்
அடுக்குமாடி குடியிருப்பில் தீ 5 குடிசைகள் எரிந்து நாசம்

சென்னை: மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையை சேர்ந்தவர் சாந்தா. இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் 5 குடிசை வீடுகள் அமைக்கப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில், விமலா என்பவர் வசித்த  குடிசை வீட்டில் நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காற்றில் தீ மளமளவென பரவி பக்கத்து வீட்டில் வசித்து வரும் நீலம்மா வீடு உள்ளிட்ட 4 குடிசை வீடுகளும் தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து, அசோக் நகர்,  தேனாம்பேட்டை, தி.நகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 5 குடிசை வீடுகள் மற்றும் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியது.

மூலக்கதை