சிகாகோவில் ஓ.பி.எஸ்.,

தினமலர்  தினமலர்
சிகாகோவில் ஓ.பி.எஸ்.,

வாஷிங்டன்: துணை முதல்வர் பன்னீர்செல்வம், பத்து நாட்கள் அரசு பயணமாக, நேற்று(நவ.,8) அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இன்று சிகாகோ சென்றடைந்த அவருக்கு, அங்குள்ள தமிழ்சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன், அவரது மனைவி, மகன் ரவீந்திரகுமார், நிதித்துறை செயலர் கிருஷ்ணன், துணை முதல்வரின் நேர்முக உதவியாளர் நாகராஜன் ஆகியோர் உடன் சென்றனர்.

நாளை சிகாகோவில் நடக்கும் 'குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்- 2019' விழாவில், ஓபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவில், அவருக்கு 'சர்வதேச ரைசிங் ஸ்டார்' விருது வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை