நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி உரை

டெல்லி: நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி   அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு   உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3   மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில்   கட்டும் பணி நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய, மாநில    அரசுகளால் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு கட்சி தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், நாட்டு மக்களிடையே காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, * பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது. * நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.* உச்சநீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது நிரூபணமாகியுள்ளது.* எவ்வளவு கடினமான பிரச்னை என்றாலும் சட்டத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்று நிருபணமாகியுள்ளது. * மிக நீண்ட சட்ட நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது: இந்த தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. * உலகிலேயே இந்தியாதான் நீதியை நிலைநிறுத்தும் நாடாக விளங்குகிறது.* அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். * இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்த நாள் சிறந்த உதாரணம். * வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று.* தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.* மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. * கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய பாதை உருவாகியுள்ளது. * அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என நாடு விரும்பியது நிகழ்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. * நமது ஜனநாயகம் எவ்வளவு பலம் பொருந்தியது என்று உலகமே கண்டுள்ளது. * தீர்ப்பை வரவேற்ற விதம் இந்தியாவின் கலாசாரம், சமூக நல்லிணக்க பாரம்பரியத்திற்கு சான்று. * தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது.

மூலக்கதை