ஆய்வு! வயல்களில் நோய் தாக்கம் ... பாதிப்பு குறித்து வேளாண் அதிகாரிகள்

தினமலர்  தினமலர்
ஆய்வு! வயல்களில் நோய் தாக்கம் ... பாதிப்பு குறித்து வேளாண் அதிகாரிகள்

புவனகிரி : விதை நேர்த்தி செய்த வயல்களில் தாக்கியுள்ள நோய் குறித்து, வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினர்.

புவனகிரி அருகே சாத்தப்பாடி, வயலாமூர் சுற்று பகுதியில் மானம்பாத்தான் வாய்க்கால் மற்றும் முரட்டு வாய்க்கல் தண்ணீரை கொண்டு, சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேல், நேரடி விதை நேர்த்தி செய்துள்ளனர். விதைநேர்த்தி செய்து 70 நாளில் நாற்றுகள் செழித்து வளர்ந்துள்ளது.இந்நிலையில், ஒரு வகையான நோய் தாக்கியதால் நாற்றுகள் பழுப்படைந்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். புவனகிரி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில், இது குறித்து விவசாயிகள் முறையிட்டனர்.

அதன் பேரில் நேற்று வேளாண் உதவி இயக்குனர் சுதமதி, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் மருதாச்சலம், கடலுார் மாவட்ட வேளாண் துறை உரக்கட்டுப்பாட்டு அலுவலர் பார்த்தசாரதி உள்ளிட்ட அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வயல்களில் நேரில் ஆய்வு செய்தனர்.இத்தகைய நோய் தாக்குதலில் இருந்து விடுபட கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்து விவசாயிகளிடம் பல்வேறு ஆலோசனை வழங்கினர்.

மூலக்கதை