குருநானக் பயணம்; முக்கிய ஆதாரம்

தினமலர்  தினமலர்
குருநானக் பயணம்; முக்கிய ஆதாரம்

புதுடில்லி: அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம், ஹிந்துக்களுக்கு சொந்தம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, குருநானக் பயணம், முக்கிய ஆதாரம்.

இதுகுறித்து, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சீக்கிய மதத்தின் நிறுவனரும், 10 சீக்கிய குருக்களில் மூத்தவருமான, குருநானக் தேவ்ஜி, 1507ல், அயோத்திக்கு யாத்திரை சென்றார். டில்லி, ஹரித்வார், சுல்தான்பூர் வழியாக சென்ற அவர், நான்கு ஆண்டுகள் பயணத்துக்கு பின், 1510 - 11ல், அயோத்தி வந்தடைந்தார். ஸ்ரீராம ஜென்ம பூமி மந்திரை அடைந்து, ராமரை தரிசனம் செய்தார். அப்போது, பாபர் இந்தியாவில் கால் பதிக்கவில்லை. பாபர், இந்தியாவுடன் இணைந்திருந்த அப்போதைய பாகிஸ்தானில் கால் பதித்தது, 1519ல் தான்!


இது, அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் தான் ராமர் சன்னிதி இருந்தது என்பதற்கான ஆதாரம். குருநானக், ராம ஜென்ம பூமியில் உள்ள கோவிலை தரிசித்தார் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை