தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி உரை

தினகரன்  தினகரன்
தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி உரை

டெல்லி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து மோடி உரையாற்றி வருகிறார். நீண்ட காலம் நிலுவையில் உள்ள அயோத்தி வழக்கு முடிவுக்கு வந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது நமது கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மையை பிரதிபலிக்கிறது. இன்றைய நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெறத்தக்கவை.உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு ஒருமனதான தீர்ப்பை வழங்கியுள்ளது. அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் தனது உறுதி நிலையை நிரூபித்து உள்ளது. தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம், நமது நீதி பரிபாலன் அமைப்பு அனைத்தும் பாராட்டுக்கு உரியவை என்று மோடி தெரிவித்துள்ளார்.சிக்கலான வழக்குகளையும் சட்டப்படி தீர்க்க முடியும் என உச்சநீதிமன்றம் நிரூபித்துள்ளது. புதிய தொடக்கத்துக்கான நேரம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மூலக்கதை