'புல் புல்' புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து

தினகரன்  தினகரன்
புல் புல் புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து

கொல்கத்தா: புல் புல் புயல் நாளை அதிகாலையில் அதி தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான, \'புல் புல்\' புயல், நாளை அதிகாலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே, அதி தீவிர புயலாக கரையை கடக்கும்\' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசும், மிக பலத்த மழை பெய்யும், மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு இருக்காது என்று  உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்கத்தில், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்க வேண்டாம். இவ்வாறு, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், புல் புல் புயலின் தாக்கம் காரணமாக, நேற்று அதிகாலையிலிருந்தே, பலத்த மழை பெய்து வருகிறது.

மூலக்கதை