12-ம் தேதி குருநானக்கின் 550-வது பிறந்த தினம்: கர்தார்பூர் குருத்துவாரா சென்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

தினகரன்  தினகரன்
12ம் தேதி குருநானக்கின் 550வது பிறந்த தினம்: கர்தார்பூர் குருத்துவாரா சென்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்

கர்தார்பூர்: சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின், 550வது பிறந்த தினம், 12-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. குருநானக்கின் சமாதியான கர்தார்பூர்  சாஹிப், பாகிஸ்தானில், சர்வதேச எல்லையை ஒட்டி, ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக  கருதுகின்றனர். குருநானக் சமாதிக்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக்  நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை, மத்திய அரசு சிறப்பு பாதை அமைத்துள்ளது. அதேபோல் பாக்., எல்லையிலிருந்து கர்தார்பூர் சாஹிப் வரை  பாகிஸ்தான் சிறப்பு பாதை அமைத்துள்ளது.இந்தப் பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கர்தார்பூர் சாஹிப்புக்கு செல்ல இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், \'டுவிட்டர்\' சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் பாஸ்போர்ட், வீசா,  இல்லாமலேயே அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். முதல் பயணிகள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திர சிங், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர்  உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 150 எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உட்பட 575 பேர் கர்தார்பூர் யாத்திரை செல்ல தயாராக உள்ளனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குருத்துவாராவுக்கு சென்றுள்ளார்.

மூலக்கதை