மழையால் ஆனந்தமழை! கோவையில் நிலத்தடி நீர் அதிகரிப்பு:இன்னும் உயரும் என கணிப்பு

தினமலர்  தினமலர்
மழையால் ஆனந்தமழை! கோவையில் நிலத்தடி நீர் அதிகரிப்பு:இன்னும் உயரும் என கணிப்பு

கோவை:கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில், நிலத்தடி நீர் மட்டம் ஒன்றரை மீட்டர் அதிகரித்துள்ளது, பொதுப்பணித்துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது.நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை, பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மாதம்தோறும் கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள, கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.கடந்தாண்டு அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்தில் 13.35 மீட்டர் என்ற மட்டத்தில் நிலத்தடி நீர் இருந்தது. இந்தாண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட ஆய்வில், 12.80 மீட்டர் என்ற மட்டத்தில் நிலத்தடி நீர் உள்ளது. அதாவது, கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு, 0.55 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.முந்தைய ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு செப்டம்பர் மாதம் கோவை மாவட்டத்தில், 0.74 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்திருந்தது.இரண்டு மாதங்களில் மட்டும், ஒன்றரை மீட்டர் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது, ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஆகஸ்ட் மாதவாக்கில், கோவை மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை, மழைநீர் சேகரிப்புக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பலனாக, நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது.'அக்டோபரில், இயல்பு மழையான 146 மி.மீ.,யை காட்டிலும், 50 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு கிடைத்துள்ளது.
கோவையின் சராசரி மழைப்பொழிவு, ஆண்டுக்கு 674 மி.மீ., மட்டுமே.நவம்பர் முதல் வாரத்திலேயே, 700 மி.மீ.,யை மழைப்பொழிவு கடந்து விட்டது. தற்போதும் நல்ல மழை பெய்து வருவதால், வரும் மாதங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது' என்று, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.கடந்தாண்டு அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்தில் 13.35 மீட்டர் என்ற மட்டத்தில் நிலத்தடி நீர் இருந்தது. இந்தாண்டு அக்டோபரில் நடத்தப்பட்ட ஆய்வில், 12.80 மீட்டர் என்ற மட்டத்தில் நிலத்தடி நீர் உள்ளது. அதாவது, கடந்தாண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு, 0.55 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

மூலக்கதை