தமிழக அணி வெற்றி | நவம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
தமிழக அணி வெற்றி | நவம்பர் 08, 2019

திருவனந்தபுரம்: சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் தமிழக அணி 37 ரன் வித்தியாசத்தில் கேரளாவை தோற்கடித்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த சையது முஷ்தாக் அலி டிராபி (‘டுவென்டி–20’) தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், கேரளா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கேரளா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

தமிழக அணிக்கு முரளி விஜய் (1), ஜெகதீசன் (8) ஏமாற்றினர். பாபா அபராஜித் (35) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ ஆனார். கேப்டன் தினேஷ் கார்த்திக் (33), விஜய் சங்கர் (25), ஷாருக்கான் (28) ஓரளவு கைகொடுத்தனர். தமிழக அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. முகமது (34), முருகன் அஷ்வின் (2) அவுட்டாகாமல் இருந்தனர். கேரளா சார்பில் பசில் தம்பி 3 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய கேரளா அணிக்கு கேப்டன் ராபின் உத்தப்பா (9) ஏமாற்றினார். விஷ்ணு வினோத் (24), ரோகன் குன்னும்மால் (34), சச்சின் பேபி (32) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, கேரளா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் நடராஜன், பெரியசாமி தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை