சகால் ‘சிக்சர்’ விளாச முடியுமா | நவம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
சகால் ‘சிக்சர்’ விளாச முடியுமா | நவம்பர் 08, 2019

ராஜ்கோட்: ‘‘போட்டியில் சிக்சர் அடிக்க வலுவான தசைகள் தேவை இல்லை. சரியாக கணித்து கணித்து விளையாடினால் சகால் கூட சிக்சர் விளாசலாம்,’’ என, ரோகித் சர்மா தெரிவித்தார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வீழ்ந்ததால், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 20 ஓவரில் 153/6 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் அசத்தினார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த இவர் 6 பவுண்டரி, 6 சிக்சர் விளாசினார். 43 பந்தில் 85 ரன்கள் எடுக்க, இந்திய அணி 15.4 ஓவரில் 154/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

என்ன தேவை

இது குறித்து, இந்திய கிரிக்கெட் போர்டு இணையதளத்தில் இந்திய ‘சுழல்’ வீரர் சகாலுக்கு, கேப்டன் ரோகித் அளித்த பேட்டி:

போட்டியில் சிக்சர் அடிக்க வலுவான தசைகள் தேவை இல்லை. பந்தை சரியான நேரத்தில் கணித்து, தலை மற்றும் உடலை நல்ல நிலையில் வைத்து விளாசினால் போதும். இந்த முறையை பின்பற்றினால் நீங்கள் கூட சிக்சர் அடிக்கலாம். மொசதெக் வீசிய 10வது ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்சர் அடிக்கலாம் என எண்ணினேன். முதல் மூன்று பந்துகளில் இதை எட்டிவிட்டேன். அடுத்த பந்தில் வாய்ப்பு கைநழுவியது. இதன் காரணமாக, ஒன்றிரண்டு ரன்களாக சேர்க்க முடிவு செய்தேன். போட்டியில் ஏதாவது ஒரு வீரர் நீண்ட நேரம் விளையாடினால், அணியை எளிதாக கரை சேர்க்கலாம்,’’ என்றார்.

 

மூலக்கதை