அஷ்வினுக்கு ரூ. 7.6 கோடி | நவம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
அஷ்வினுக்கு ரூ. 7.6 கோடி | நவம்பர் 08, 2019

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக அஷ்வின் விளையாட உள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ளது. இதற்கு முன், ஒவ்வொரு அணியும், வேறு அணிகளிடம் இருந்து வீரர்களை மாற்றிக் கொள்ள வரும் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் இருந்தார். இவரது தலைமையில் பஞ்சாப் அணி பெரிய அளவில் சாதிக்கவில்லை. இவரை வேறு அணிக்கு விற்க பஞ்சாப் அணி நிர்வாகம் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ளே முடிவு செய்தனர்.

அஷ்வினை வாங்க டில்லி அணி ஆர்வம் காட்டியது. இவரை ரூ. 7.6 கோடிக்கு வாங்கியது. சென்னை, புனே, பஞ்சாப் அணிகளுக்காக விளையாடிய இவர், இதுவரை 139 போட்டிகளில், 125 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இவருக்கு பதிலாக டில்லி அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ஜெகதீச சுசித் (ரூ. 20 லட்சம்), பஞ்சாப் அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மூலக்கதை