மாலன் சதம்: இங்கிலாந்து அபாரம்! | நவம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
மாலன் சதம்: இங்கிலாந்து அபாரம்! | நவம்பர் 08, 2019

 நேப்பியர்: நான்காவது ‘டுவென்டி–20’ போட்டியில் மாலன் சதம் அடிக்க, இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் நியூசிலாந்து 2–1 என முன்னிலை வகித்தது. நான்காவது போட்டி நேப்பியரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு பான்டன் (31), பேர்ஸ்டோவ் (8) சுமாரான துவக்கம் தந்தனர். ட41 பந்தில் 91 ரன் எடுத்தார் மார்கன். டேவிட் மாலன், சர்வதேச ‘டுவென்டி–20’ ல் முதல் சதம் அடித்தார்.

இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 241 ரன்கள் குவித்தது. மாலன் (103),  இருந்தார்.

சவுத்தீ ஆறுதல்

கடின இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (27), முன்ரோ (30), கேப்டன் சவுத்தீ (39), ராஸ் டெய்லர் (14), சான்ட்னர் (10) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. 16.5 ஓவரில் 165 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தற்போது தொடர் 2–2 என சமநிலையில் உள்ளது.

 

48

நேப்பியர் போட்டியில் 48 பந்தில் சதம் அடித்தார் மாலன். ‘டுவென்டி–20’ அரங்கில் அதிவேக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் ஆனார் மாலன். இவர் 48 பந்தில் சதம் எட்டினார். இதற்கு முன் ஹேல்ஸ் 60 பந்தில் (எதிர்–இலங்கை, 2014) சதம் அடித்து இருந்தார்.

 

182

நியூசிலாந்துக்கு எதிராக மார்கன், மாலன் இணைந்து 3 வது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து ‘டுவென்டி–20’ அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இது அமைந்தது.

 

241

நேற்று எடுத்த 241/3 ரன்கள் தான், சர்வதேச ‘டுவென்டி–20’ல் இங்கிலாந்து அணியின் உயர்ந்த ஸ்கோர். இதற்கு முன் 2016ல் மும்பை போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 230/8 ரன் எடுத்திருந்தது.

 

மூலக்கதை