பந்தை ‘ஸ்டெம்பிங்’ செய்த ரிஷப் பந்த்: உண்மையில் உனக்கு விக்கெட் கீப்பிங் தெரியுமா?

தினகரன்  தினகரன்
பந்தை ‘ஸ்டெம்பிங்’ செய்த ரிஷப் பந்த்: உண்மையில் உனக்கு விக்கெட் கீப்பிங் தெரியுமா?

ராஜ்கோட்: இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், முகமது நைம் களமிறங்கினர். விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்த போது 6வது ஓவரை சஹால் வீசினார். சஹால் பந்தை இறங்கி வந்து அடிக்க முயற்சித்த தாஸ் பந்தை தவறவிட்டார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் வேகமாக ஸ்டெம்பிங் செய்ததால் முதலில் அவுட் கொடுக்கப்பட்டது.ஆனால், டிவி ரிப்ளேவில் பார்க்கும் போது பந்து ஸ்டெம்பை கடந்து வருவதற்கு முன்பே ரிஷப் அதனை பிடித்து ஸ்டெம்பிங் செய்ததுபோல் இருந்தது. இது, ஐசிசி விதியை மீறிய செயலாகும். பந்து ஸ்டெம்பை கடக்கும் முன் விக்கெட் கீப்பர் அதை பிடித்து ஸ்டெம்பிங் செய்யக் கூடாது. இதனால் ரிஷப் பந்த் செய்த ஸ்டெம்பிங் ‘நாட் அவுட்’ என 3வது நடுவரால் அறிவிக்கப்பட்டது. மேலும் ‘நோ பால்’ என்றும் அறிவிக்கப்பட்டு லிட்டன் தாஸூக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.நடுவரின் முடிவை அடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் மீண்டும் ரிஷப் பந்திடம் ரன் அவுட்டாகி 29 ரன்களில் வெளியேறினார். தாஸை ரன்அவுட் செய்தாலும், மிகவும் ஈசியான ஸ்டெம்பிங்கை தவறவிட்ட ரிஷப் பந்தை ரசிகர்கள், உண்மையில் உனக்கு விக்கெட் கீப்பிங் தெரியுமா? என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முகமது நைம் 36 (31) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது.அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா ரசிகர்களை உற்சாகப்படுத்த வாணவேடிக்கை காட்டி, 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். 31 (27) ரன்களில் தவான் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கு 85 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எளிதாக பேட்டிங் செய்து 15.4 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதனால் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூலக்கதை