சல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் கனவு: நடிகர் பரத்

தினமலர்  தினமலர்
சல்மானுடன் நடிக்கிறேன்; நிறைவேறும் கனவு: நடிகர் பரத்

ஹிந்தியில் சல்மான் கானை வைத்து பிரபுதேவா இயக்கி உள்ள ‛தபங் 3' படம், டிச.,20ல் வெளியாகிறது. இதையடுத்து, மீண்டும் அவரை வைத்தே ‛ராதே' என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் பரத் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

‛‛சாதனைக்கு நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையோடு வெகு காலம் காத்திருந்தேன். தற்போது அதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் ‛ராதே' படத்தில் நானும் ஒரு அங்கமாய் இருப்பது மகிழ்ச்சி. சல்மான் கான் உடன் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை தந்த பிரபுதேவாவுக்கு நன்றி'' என டுவிட்டரில் பரத் கூறியுள்ளார்.

மூலக்கதை