தமிழில் கார்த்திக் சுப்பராஜ் வெளியிடும் 'அல்லி'

தினமலர்  தினமலர்
தமிழில் கார்த்திக் சுப்பராஜ் வெளியிடும் அல்லி

மலையாளத்தில் கடந்த வருடம் சிறந்த நடிகர் நடிகைக்கான கேரள அரசு விருதுகளை தட்டிச்சென்ற படம் சொள' (சுளை). தேசிய விருது படங்களை இயக்கி பெயர்பெற்ற சனல்குமார் சசிதரன் இயக்கியுள்ள இந்தப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு பரிசு பெற்றது. இந்தப்படத்தில் குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் இளம் நாயகி நிமிஷா சஜயன் இருவருமே கேரள அரசின் விருதுகளை பெற்றார்கள்.

தற்போது இந்தப்படம் மலையாளத்தில் டிச-6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதேசமயம் இந்தப்படத்தை அதே தேதியில் தமிழிலும் 'அல்லி' என்கிற பெயரில் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறாராம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். தனுஷை வைத்து தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கிவரும் படத்தில் 'சொள' படத்தின் நாயகனான ஜோஜூ ஜார்ஜ் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை