சூர்யாவின் ஆக்சன்: வியந்த ஜான் ஆபிரகாம்

தினமலர்  தினமலர்
சூர்யாவின் ஆக்சன்: வியந்த ஜான் ஆபிரகாம்

சூர்யா தற்போது சுதா கொங்கரா டைரக்ஷனில் சூரரைப்போற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார்.. ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளாராம் சுதா கொங்கரா.. அதற்காகவே சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவ் மாஸ்டர்களை இந்த படத்தில் களமிறக்கியுள்ளார் சுதா கொங்கரா.

ஆக்சன் காட்சிகளில் சூர்யாவின் பங்களிப்பு குறித்து ரொம்பவே வியந்து போனார்களாம் அன்பறிவ் மாஸ்டர்கள். இந்தப்படத்தின் சில காட்சிகளை இவர்கள் பணிபுரியும் பாலிவுட் படமொன்றில் ஹீரோ ஜான் ஆபிரஹாமிடம் காட்டியபோது அன்பறிவை பாராட்டியதோடு, சூர்யாவின் மெனகெடலை பார்த்து வியந்து போனராம்.

மூலக்கதை