ஜோதிகா - கார்த்தி பட தலைப்பு 'தம்பி' ?

தினமலர்  தினமலர்
ஜோதிகா  கார்த்தி பட தலைப்பு தம்பி ?

கைதி படத்தின் வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் இருக்கும் கார்த்தி, அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தான் நடித்துள்ள படத்தின் ரிலீசை ரொம்பவே எதிர்பார்த்து வருகிறார்.. இந்த படத்தில் கார்த்தியின் அண்ணி ஜோதிகா, அக்காவாக நடித்துள்ளார்.. கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார்..

இப்போதுவரை இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் தான் இருக்கிறது.. அதேசமயம் இந்தப் படத்திற்கு அடுத்ததாக பாக்யராஜ் கண்ணன் டைரக்சனில் கார்த்தி நடிப்பில் வெளியாக இருக்கும் படத்திற்கு சுல்தான் என பெயர் வைக்கப்பட்டு படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கு தம்பி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.. அக்கா-தம்பி இருவரை மையப்படுத்திய கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.. பதிமூன்று வருடங்களுக்கு முன்பாக சீமான் இயக்கத்தில் தம்பி என்கிற டைட்டிலில் மாதவன் நடித்த படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை