அயோத்தி வழக்கு தீர்ப்பு: கொண்டாட போலீசார் தடை

தினமலர்  தினமலர்
அயோத்தி வழக்கு தீர்ப்பு: கொண்டாட போலீசார் தடை

புதுடில்லி,: 'அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் நாளில் இனிப்பு வழங்குவோர் மற்றும் துக்கம் அனுசரிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் எச்சரித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வெளிவர உள்ளது. அப்போது தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக கருதுவோர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது; பட்டாசு வெடிக்கக் கூடாது.அதேபோல பாதகமாக இருப்பதாக கருதுவோர் துக்கம் அனுசரிக்கும்முயற்சியில் ஈடுபடக் கூடாது.


இரு தரப்பினரும் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை காட்டும் வகையிலான எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவது பேனர் வைப்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில் 'அயோத்தி வழக்கின் தீர்ப்பை நாடே எதிர்பார்த்து உள்ளது. தீர்ப்பு வெளியாகும் தினத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்' என்றனர்.


மூலக்கதை