கார்த்தி படங்களுக்கு மவுசு

தினமலர்  தினமலர்
கார்த்தி படங்களுக்கு மவுசு

கார்த்தி நடித்த காஷ்மோரா, காற்று வெளியிடை படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றிபெறாத நிலையில், அதன்பிறகு அவர் நடித்த ‛தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம்' படங்கள் வெற்றி பெற்றன. அதையடுத்து ‛தேவ்' அவருக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், தற்போது ‛கைதி', தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

கார்த்தியின் முந்தைய படங்களின் வசூலை முறியடிக்கும் வகையில், வசூலித்துக் கொண்டிருப்பதால், கார்த்தி நடித்துள்ள அடுத்தடுத்த படங்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. பொதுவாக கார்த்தியின் படங்களை மற்ற மொழிகளில் குறைந்த விலைக்கு தான் போகும். ஆனால் இப்போது கைதி படம் தெலுங்கில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அதன் காரணமாக, ‛பாபநாசம்' பட டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வரும் படம் மற்றும் சுல்தான் ஆகிய இரண்டு படங்களையும் வாங்குவதற்கு தமிழ், தெலுங்கில் விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவிக் கொண்டிருக்கிறதாம்.

மூலக்கதை