கைரேகை நிபுணராக நடிக்கும் பிரபாஸ்

தினமலர்  தினமலர்
கைரேகை நிபுணராக நடிக்கும் பிரபாஸ்

பாகுபலி நாயகன் பிரபாஸ், சாஹோ படத்தை அடுத்து, ராதா கிருஷ்ண குமார் இயக்கும் ‛ஜான்' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். பிரபாஸின் 20வது படமான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நவ., 18 முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் இப்படம், 1970களில் இத்தாலியில் நடக்கும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி உருவாகிறதாம். இதில் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை