ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா?

தினமலர்  தினமலர்
ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா?

ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்த ‛எல்.கே.ஜி' படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதனால் தனது அடுத்த படத்திற்கான கதையை எழுதி வந்த அவர், தற்போது அந்த படத்திற்கு ‛மூக்குத்தி அம்மன்' என தலைப்பிட்டுள்ளார். எல்கேஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

தற்போது ‛நெற்றிக்கண்' படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் நயன்தாராவும், மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நயன்தாரா நாயகியாக நடித்த ‛நானும் ரவுடி தான்', ‛வேலைக்காரன்' படங்களில் ஆர்.ஜே.பாலாஜி காமெடியனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பில் தான் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க ஒத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மூலக்கதை