சீன ஓபன் பேட்மின்டன் சிராக் - சாய்ராஜ் ஜோடி அரை இறுதிக்கு தகுதி

தினகரன்  தினகரன்
சீன ஓபன் பேட்மின்டன் சிராக்  சாய்ராஜ் ஜோடி அரை இறுதிக்கு தகுதி

புஸோ: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. கால் இறுதியில் முன்னாள் உலக சாம்பியன்களும், தற்போது உலக வெண்கலப் பதக்கங்களுக்கு சொந்தக்காரர்களுமான சீனாவின் லீ ஜுன் ஹுய் - லியு யூ ப்சென் இணையுடன் நேற்று மோதிய சிராக் - சாய்ராஜ் கோடி 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை போராடி வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது செட்டிலும் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் 21-19, 21-15 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். அரை இறுதியில் உலகின் நம்பர் 1 ஜோடியான இந்தோனேசியாவின் மார்கஸ் பெர்னால்டி ஜிடியோன் - கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையுடன் சிராக் - சாய்ராஜ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். கடந்த மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் தொடரின் பைனலில் இதே ஜோடியிடம் இந்திய வீரர்கள் தோற்று 2வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை