மாலன், மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி

தினகரன்  தினகரன்
மாலன், மோர்கன் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி

நேப்பியர்: நியூசிலாந்து அணியுடனான 4வது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 76 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோ 8, டாம் பான்டன் 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். டேவிட் மாலன் - கேப்டன் இயான் மோர்கன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக 182 ரன் சேர்த்தது. மாலன் சதம் விளாசி அசத்தினார்.மோர்கன் 91 ரன் (41 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி சவுத்தீ வேகத்தில் டேரில் மிட்செல் வசம் பிடிபட்டார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. மாலன் 103 ரன் (51 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), சாம் பில்லிங்ஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 16.5 ஓவரிலேயே 165 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர்கள் கப்தில் 27 ரன், கோலின் மன்றோ 30 ரன் எடுக்க, கேப்டன் சவுத்தீ அதிகபட்சமாக 39 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பார்கின்சன் 4, கிறிஸ் ஜார்டன் 2, சாம் கரன், டாம் கரன், பிரவுன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மாலன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், இரு அணிகளும் 2-2 என சமநிலை வகிக்க, கடைசி போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.

மூலக்கதை