கர்தார்பூர் வழித்தடம் இன்று திறப்பு பாக். வரும் இந்திய பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது : பாக். வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
கர்தார்பூர் வழித்தடம் இன்று திறப்பு பாக். வரும் இந்திய பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது : பாக். வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: கர்தார்பூரில் உள்ள குருநானக் குருத்வாராவுக்கு வழித்தடம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இன்று வரும் பக்தர்களு–்க்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் நாட்டு அரசு அறிவித்துள்ளது. நமது நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் புனித தலத்தில் இருந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நரோவால் மாவட்டத்தில் அமைந்துள்ள கர்தார்பூர் குருத்வாராவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது கடைசி காலத்தில் தங்கியிருந்ததையொட்டி இந்த குருத்வாராவை தரிசிக்க ஏராளமான சீக்கியர்கள் விரும்புகின்றனர். வரும் 12ம் தேதி குருநானக்கின் 550 வது பிறந்ததினம் கொண்டாடப்படுவதையொட்டி அங்கு செல்ல இந்தியாவை சேர்ந்த 5000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று கர்தார்பூர் வழித்தடத்தை இந்தியாவில் பிரதமர் மோடியும், பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானும் திறந்து வைக்கின்றனர். கர்தார்பூர் வரும் சீக்கிய பக்தர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஷி கூறுகையில், கர்தார்பூர் வரும் இந்திய பக்தர்களுக்கு 9 மற்றம் 12ம் தேதிகளில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது” என அறிவித்தார். இதன்மூலம் கட்டண விவகாரத்தில் இருந்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.குருத்வாராவில் பாக். சதிகர்தார்பூர் குருத்வாராவில் பாகிஸ்தான் ராணுவம் வைத்துள்ள வெடிகுண்டு குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வெடிகுண்டு அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இந்திய விமானப்படை 1971ம் ஆண்டில் குருத்வாராவை அழிக்கும் நோக்குடன் இந்த குண்டை வீசியது. சர்வ வல்லமை படைத்த அல்லாவின் ஆசிர்வாதம் காரணமாக இந்த சதி திட்டம் நிறைவேறவில்லை. இந்த புனித கிணற்றின் நீரை தான் குருநானக் வயலுக்கு நீர் பாய்ச்ச பயன்படுத்தினார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கியர்கள் கர்தார்பூருக்கு புனிதப்பயணம் தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு இந்த வெடிகுண்டை குருத்வாராவில் வைத்துள்ளது சீக்கியர்கள் மத்தியில் இந்தியா மீது வெறுப்புணர்வை தூண்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக கருதப்படுகிறது.

மூலக்கதை