கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத  கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏ.க்கள், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் டிச.5ம் தேதி காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக்கோரி தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும்  கிருஷ்ணா மூராரே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வக்கீல்கள் வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘தேர்தல் ஆணைய சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடமுடியாது. ேதர்தலை ஒத்திவைக்க உத்தரவிடவும் முடியாது,’ என்று கூறி நவம்பர் 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மூலக்கதை