பாதுகாப்பு என்பது ‘சும்மா’ 125 செல்போன்களில் ஒரே ஐஎம்இஐ எண் : மபி.யில் சிக்கினான் பலே கில்லாடி

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு என்பது ‘சும்மா’ 125 செல்போன்களில் ஒரே ஐஎம்இஐ எண் : மபி.யில் சிக்கினான் பலே கில்லாடி

ஜபல்பூர்: திருடப்படும் செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை மாற்றும் நபரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து, 125 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். நாடு முழுவதும் செல்போன்கள் அதிகளவில் திருடு போகின்றன. ஒவ்வொரு போனுக்கும் சர்வதேச அடையாள எண் (ஐஎம்இஐ) இருக்கும். அதை வைத்துதான் திருடு போகும் செல்போன்களை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால், இந்த எண்ணையே மாற்றும் பலே கும்பல்கள் நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.  நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் ஒரே ஐஎம்இஐ எண்ணுடன் பயன்படுத்தப்பட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலான இந்த மோசடியை தடுக்க, நாடு முழுவதும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அதன்படி,  மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில்  உள்ள ஒரு கடையில் பிரதீப் தாக்கூர்(29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 125 செல்போன்களிலும் ஒரே ஐஎம்இஐ எண் இருந்தது. இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் செல்போன்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை