தமிழகத்தில் 23 புதிய கிளைகள் ஐ.சி.ஐ.சிஐ., துவக்கம்

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் 23 புதிய கிளைகள் ஐ.சி.ஐ.சிஐ., துவக்கம்

சென்னை:தமிழகத்தில், நடப்பு நிதியாண்டில், 23 புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வங்கியின் சில்லரை வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், 23 புதிய கிளைகள் துவங்கப்பட்டுஉள்ளன.வங்கியின் விரிவாக்க நடவடிக்கையாக, 450 புதிய கிளைகள் நாடு முழுவதும் துவங்கப்படும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதில், 385 கிளைகள் துவங்கப்பட்டுவிட்டன.

வரும் மார்ச் மாதத்திற்குள் மீதம் உள்ள கிளைகள் துவங்கப்படும்.தமிழகத்தில், இதுவரை வங்கியே இல்லாத, திருச்சி மாவட்டத்தில், அலகரை, நாகப்பட்டினம் மாவட்டத்தில், அருபதி ஆகிய இரண்டு கிராமங்களில், புதிய கிளைகள் துவங்கப்பட்டுள்ளன.இதர வங்கி கிளைகள், சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய நகரங்களில் துவங்கப்பட்டு உள்ளன. தற்போது, நாடு முழுவதும், 5,260 கிளைகள் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை