அயோத்தி நில வழக்கு: நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி நில வழக்கு: நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு

டெல்லி: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதை ஒட்டி நாடுமுழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி, மதுரா, வாரணாசியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே 144தடை அமலில் உள்ளது. மாநில அரசுகள் சட்டம்-ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என ஏற்கனவே உள்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தி நில வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

மூலக்கதை