அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தி நில வழக்கில்  நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் 2.77 ஏக்கர் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.அயோத்தி நில வழக்கில் 14 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை கடந்த 17ம் தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால் அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

மூலக்கதை